தோகைமலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனைக் கூட்டம்
Kulithalai King 24x7 |7 Dec 2025 8:53 PM ISTதளபதி விஜய் தமிழக முதல்வராக நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு
தமிழக வெற்றிக் கழகம் கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற தொகுதி தோகைமலை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை குறித்த ஆலோசனை கூட்டம் தோகைமலை தனியார் திருமண மண்டபத்தில் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் நாகனூர் பாஸ்கர் ஏற்பாட்டில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் ஒன்றிய இணை செயலாளர் தனபால், பொருளார் லோகேஸ்வரன், துணை செயலாளர் ரவிசங்கர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திருப்பதி, லெட்சுமன், விஜயகுமார் மற்றும் மகளிர் அணியினர், பூத் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில் தளபதி 2026 முதல்வர் ஆக்க உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்
Next Story


