கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியூ ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி  அலுவலகம் முன்பு சிஐடியூ ஆர்ப்பாட்டம்
X
நிரந்தர தூய்மை பணியாளர்கள் வாங்கிய கூட்டுறவு கடனுக்காக பிடித்தம் செய்த தொகையை கட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர், டிச.8- நிரந்தர தூய்மை பணியாளர்கள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனுக்காக பிடித்த செய்த தொகையை உடன் வங்கியில் செலுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி ஐ டி யு மாவட்டத் துணைச் செயலாளர் அன்பு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜெயபால், சுமை பணி மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் கடந்த 14/7/2025 அன்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் வாங்கிய கூட்டுறவு கடனுக்காக பிடித்தம் செய்த தொகையை கட்டுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை செலுத்தவில்லை. இந்தத் தொகையை உடன் செலுத்த வேண்டும். தொழிலாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்து கட்டப்படாமல் உள்ள வருங்கால வைப்பு நிதி தொகையை தொழிலாளர்கள் கணக்கில் உடன் செலுத்த வேண்டும் நாள் ஒன்றுக்கு நாலு முறை பயோமெட்ரிக் முறையில் கைரேகை வைக்கும் நடைமுறையை காலை, மதியம் என இரு வேளையாக மாற்ற வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகள் வரை ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பண பயன்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதியை உடன் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பெரிய கலியன், அய்யனார், வேலு, அண்ணாதுரை, ஜெயா மற்றும் பல கலந்து கொண்டனர்.
Next Story