பழைய ஜெயங்கொண்டத்தில் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
Krishnarayapuram King 24x7 |8 Dec 2025 5:26 PM ISTதிரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஐயப்பன், செல்வ விநாயகர், மஞ்சள் மாதா, பாலகணபதி, கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. கோவில் புதிதாக கட்டப்பட்டு தற்போது கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ம் தேதி மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீ அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து மகா கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, புண்ணியாகம் வேதிகார்ச்சனை மண்டபார்ச்சனை, ஹ தத்வார்ச்சனை, நாடி சந்தனம் திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, மகாதீபாரதனை உள்ளிட்ட நான்கு கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று 4ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தினை மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீரினை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது . பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த 100 ஐயப்ப சுவாமிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story


