கள்ளை சாலையில் ஜேசிபி மூலம் பனை மரங்கள் அகற்றம்
Kulithalai King 24x7 |8 Dec 2025 7:04 PM ISTநடவடிக்கை எடுக்க தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் கோரிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலையில் இருந்து வெள்ளப்பட்டி வழியாக கள்ளை செல்லும் சாலையில் வருந்திப்பட்டி மயான கொட்டகை அருகே கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சாலை ஓரம் உள்ள பனை மரக்கன்றுகளை ஜேசிபியில் பிடுங்கி உள்ளனர். இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு அப்பகுதியினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல் மாலைமேடு பகுதியிலும் இன்று சாலை ஓரத்தில் இருந்த பனை மரங்களை வேரோடு அகற்றி உள்ளனர். வருவாய் துறை நடவடிக்கை எடுக்க தமிழர் தேசம் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் கள்ளை அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story



