செஸ் போட்டியில் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்பு

X
Komarapalayam King 24x7 |8 Dec 2025 8:57 PM ISTகுமாரபாளையத்தில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.
குமாரபாளையம் செஸ் கிடோ அமைப்பின் சார்பில் 9,12,15, உள்ளிட்ட பல்வேறு வயது பிரிவின் கீழ் செஸ் போட்டிகள், நிறுவனர் கியான் சூர்யா தலைமையில் நடத்தப்பட்டன. இதில் சேலம், கோவை, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, முதல், இரண்டாம், மூன்றாம் பரிசாக ஷீல்டு, சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினார். இவர் பேசியதாவது: மாணவ, மாணவியர்கள் பெருமளவில் இந்த செஸ் போட்டியில் பங்கேற்றது வரவேற்கத்தக்கது. பள்ளி மற்றும் கல்லூரி படிப்புடன் விளையாட்டு பயிற்சியும் அவசியம். இதனால் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மனமும் புத்துணர்ச்சி பெறும். மேலும் விளையாட்டில் சாதனை செய்தால், அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. மாணவ, மாணவியர்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். செஸ் டிடோ நிர்வாகிகள் ரஞ்சித், சூர்யா, பாசம் முதியோர் இல்ல நிறுவனர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
