தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்

தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
X
தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
டிசம்பர் 8 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. #449 மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ளது. 2. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்ற "தூய்மையே சேவை 2025# பேரணி இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தூய்மை சேவையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்றனர். 3. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரமாக தென்காசி மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஒருவார காலம் தென்காசி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்பட உள்ளது. 4. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 5. தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பிடம், பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 6. குற்றால அருவிகளில் இன்று நான்காவது சோமவார தினத்தையும் முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் நீராடி மகிழ்ந்தனர். அருவிகளுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படுகிறது. 7. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் கீழ் வண்டியை வழங்கப்பட்டு வருகிறது. இன்று குறும்பலாபேரி அரசு பள்ளியில் வழங்கப்பட்டது. 8. சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயிலில் இன்று நான்காவது சோமவார தினத்தை முன்னிட்டு சங்காபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. 9. செங்கோட்டை, வேப்பங்குளம், செந்தட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வானவில் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. 10. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணி டிசம்பர் . 9 துவங்க உள்ளது.
Next Story