ஆய்குடியில் பழுதடைந்த ரோட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X
Tenkasi King 24x7 |9 Dec 2025 11:09 AM ISTபழுதடைந்த ரோட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி கம்பிளி இடையே உள்ள ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் கீழ்புறம் பழுதடைந்த ரோடு ஒரு மாதத்திற்கு மேலாக சரி செய்யாமல் உள்ளது இதனால் ஏற்கனவே கடந்த 23ம் தேதி இதே இடத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் சாம்பவர்வடகரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பலியான நிலையில் தற்போது வரை நெடுஞ்சாலை துறையினர் சரி செய்யவில்லை ஏற்கனவே தமிழக முதல்வர் பயணம் செய்ததற்காக பல இடங்களில் எடுக்கபட்ட வேகதடைகளாலும் மழையினால் சேதமடைந்த சாலைகளாலும் கனிமவள லாரிகள் கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக செல்வதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன ஆகவே சாலைகளை உடனே சீரமைத்து வேகத்தடைகள் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story
