கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
X
பொதுமக்கள்,பள்ளி மாணவ மாணவிகள் கடும் அவதி
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை கடைவீதி, கொடிக்கால் தெரு, சிவசக்தி நகர், சந்தைப்பேட்டை, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடைவீதியில் உள்ள உணவகங்கள் மற்றும் இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை தெரு நாய்கள் உண்டு வருகின்றன. இதனால் சாலைகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாகவும் சுற்றி திரிந்து வருகிறது. மேலும் லாலாபேட்டை பகுதியில் அரசு துவக்கப்பள்ளி மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. தெரு நாய்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றியும் திரிந்து வருகின்றன. இதில் பல நேரங்களில் பள்ளிக்கு நடந்து மற்றும் சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளை துரத்தி கடித்து வருகின்றன. இதனால் மாணவ, மாணவிகள் பலரும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் பொது மக்களையும் துரத்தி கடிப்பதுடன், கூட்டமாக திரியும் நாய்கள் தங்களுக்குள் சாலையில் சண்டையிட்டு பைக்கின் குறுக்கே வந்து விழும்போதும் பலரும் அடிப்பட்டு காயம் அடைந்து வருகின்றனர். தெருநாய்களை எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல முறை கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அச்சமின்றி சாலையில் சாலையில் நடந்து செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story