ராமநாதபுரம் அன்னைசோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் அன்னை சோனியா காந்தியில் 79 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம்காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியில் 79 ஆவது பிறந்த நாளை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதே போன்று ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் இரா.கருமாணிக்கம் எம்.எல்.ஏ., தலைமையில் அன்னை சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவர் உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டி கோட்டை வாசல் பிள்ளையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதனைதொடர்ந்து, மாவட்ட கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சி மாவட்ட பொருளாளர் ராஜாராம் பண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன்,நகர் தலைவர் கோபி,வட்டார தலைவர்கள் கார்குடி சேகர்,சேதுபாண்டியன்,மாநில செயலர் குமார், மற்றும் நிர்வாகிகள் கோபால்,பாஸ்கர சேதுபதி, ராமேசுவரம் நகர் தலைவர் பாபா செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story