நாமக்கல்லில், தமிழ்நாடு அரசு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட கிளை சார்பில், அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியலில் ஈடுபட்ட ஈடுபட்டவர்களை ஈடுபட்ட 125 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற மாநிலம் தழுவிய இந்த மறியல் போராட்டத்தில், தமிழ் மாநில அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் எஸ். குர்ஷித் பேகம் தலைமை வகித்தார்.அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. அனுராதா, மாநில செயற்குழு உறுப்பினர் பி. பாண்டிமாதேவி உள்ளிட்டோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றிப் பேசினார்கள். இதில் நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, மோகனூர், மல்லசமுத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 125 பேர் கலந்துகொண்டனர்.அப்போது, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் காலியாக உள்ள பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்., மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, இளநிலை உதவியாளர் இணையான ரூபாய் 19,500 ஊதியம் வழங்க வேண்டும்., அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ரூபாய் 15 ஆயிரத்து 700 ஊதியம் வழங்க வேண்டும்., அகவிலைப் படியுடன் சிறப்பு ஓய்வூதியம் ரூபாய் 6750 வழங்க வேண்டும்., தற்செயல் விடுப்பு நாள் மொத்தமாக வழங்க வேண்டும், ஈட்டிய மற்றும் ஈட்டா விடுப்பு பிழைப்பூதியம் வழங்க வேண்டும்.,கோடை விடுமுறை ஒரு மாதம் வழங்க வேண்டும்., மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும்., பணி ஓய்வின் போது பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்களை எழுப்பினர்.அப்போது, பேசிய தமிழ் மாநில அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் உதவியாளர்கள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் எஸ். குர்சித் பேகம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,532 அங்கன்வாடி மையங்களில் 3,000-க்கும் மேற்பட்ட பணியாளர் மற்றும் உதவியாளர்கள் இருக்க வேண்டும். இதில் சுமார் 40 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே குழந்தைகளை பராமரிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள அங்கன்வாடி மையங்களில் மையப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். என தெரிவித்தார்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், திடீரென கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள, பிரதான சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது காவல் துறையினர், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியநிலையில், சாலை மறியலை கைவிட மறுத்ததால் அவர்களை காவல் துறையினர் கைது செய்து, வாகனத்தில் அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.நாமக்கலில், அங்கன்வாடி மையப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story