திருவண்ணாமலை, ஆரணியில் இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்.

X
Arani King 24x7 |9 Dec 2025 11:18 PM ISTதிருவண்ணாமலை, ஆரணி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் எதிரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆரணி, திருவண்ணாமலை, ஆரணி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் எதிரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பல நீதிமன்றங்களில் இணைய வசதி, கணினிகள் போன்ற தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இல்லை, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கு இ-பைலிங் முறையை கையாள்வது குறித்து போதிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு இல்லை, ஏற்கனவே உள்ள பிரச்சனைகளை சரிசெய்யாமல், திடீரென இ-பைலிங்கை கட்டாயமாக்குவது சிரமத்தை ஏற்படுத்துகிறது, அவசர வழக்குகளை உடனடியாக தாக்கல் செய்ய முடியாமல் போவது ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது ஆகையால் இ-பைலிங் முறையை எதிர்த்து திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் ஐ.சேகர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் மூத்த வழக்கறிஞர்கள் அபிராமன், பாசறைபாபு, ஏ.காளிங்கன், பார்த்திபன், பார் அசோசியேஷன் துணை தலைவர் சசிகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் எஸ்.மகாலிங்கம், சி.ஏழுமலை, எம்.ஏ.சரவணன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். முறையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் இ-பைலிங் முறையை நடைமுறை செய்வதை திரும்ப பெறவேண்டும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நேரடி வழக்கு தாக்கல் செய்யும் முறையை அனுமதிக்க வேண்டும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முடிவில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு துணை தலைவர் எஸ்.கண்ணன் நன்றி கூறினார். இதே போல் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திருஞானம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கச் செயலாளர் விநாயகம் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் வெங்கடேசன், ஸ்ரீதர், மூத்த வழக்கறிஞர்கள் சிகாமணி, கே.ஆர். ராஜன், சரவணன், வழக்கறிஞர்கள் பொன்னுரங்கம், பார்த்திபன், தரணி காசிநாதன், பரசுராமன், பாபு கு.கார்த்தி முடித்த பலர் கலந்து கொண்டனர்.
Next Story
