கள்ளக்குறிச்சி நகராட்சி உட்பட்ட பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை " விரைந்து நடவடிக்கை எடுக்குமா? நகராட்சி நிர்வாகம்!

X
Rishivandiyam King 24x7 |10 Dec 2025 4:48 PM ISTகள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை குழந்தைகளும் பொதுமக்களும் அச்சம், விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி பேரவை கோரிக்கை
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டில் மற்றும் அனைத்து வார்டுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லை, தெரு நாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் குழந்தைகள் பெரும் துயரத்துக்கு ஆளாகிறார்கள் ஆகவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்ற உத்தரன்படியும், தமிழக நல்வாழ்வுத்துறை அலுவலக உத்தரவு படியும் தெரு நாய்களுக்கு இராபிக்ஸ் தடுப்பூசியும், வீட்டு நாய்களுக்கு கண்காணிப்பு கருவியும் பொறுத்த வேண்டுமெனவும்,கள்ளக்குறிச்சி நகராட்சி உட்பட்ட பகுதியில்தெரு நாய்களுக்குகாப்பகம் அமைக்கவும் கள்ளக்குறிச்சி நகராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் நீதிப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
Next Story
