புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றியமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு.

புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றியமைக்க வேண்டும்: மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., பேச்சு.
X
புதிய மோட்டார் வாகன ஸ்கிராப்பிங் பாலிசியை மாற்றி அமைத்து, லாரிகளில் இன்ஜினை மட்டும் மாற்றும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் ராஜேஷ்குமார் எம்.பி., கோரிக்கை விடுத்துப் பேசினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில், திமுக எம்.பி., நாமக்கல் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு பேசியதாவது,15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் பழமையான கார்கள், வேன்கள், லாரிகள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டும் என்றும், மேலும் இதை வலியுறுத்தும் வகையில், பழைய லாரிகள் மற்றும் மோட்டார் வாகனங்களை ஒவ்வொரு ஆண்டும் எப்.சி. சான்று பெறுவதற்கான கட்டணம் சுமார் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.20 ஆண்டுகளுக்கு மேலான லாரிகள் உள்ளிட்ட வணிக வாகனங்களை கட்டாயமாக ஸ்கிராப்பிங் செய்து விற்பனை செய்வது, எண்ணற்ற லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதித்து வருகிறது. இந்தியாவின் சரக்கு போக்குவரத்தின் முதுகெலும்பான இந்த லாரிகளில், பாடி திறன் கட்டமைப்பு கொண்டுள்ளன. மாசுபாட்டிற்க முக்கிய காரணம் பொதுவாக பழைய இன்ஜின் தான். எனவே பழைய லாரிகள் முழுமையாக ஸ்கிராப் செய்யாமல், பழைய மாசுபடுத்தும்இன்ஜினை மாற்றி, புதிய பாரத் ஸ்டேஜ் 6 நிலைக்கு இணக்கமான இன்ஜினை லாரியில் பொருத்தினால், தடுக்கப்படும். சுற்றுச்சூழல் மேலும், மாசு அதன் உரிமையாளர்களுக்கு செலவு மிகவும் குறையும்.எனவே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் இந்தக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, 20 ஆண்டுகளுக்கும் மேலான லாரிகளில் பழைய இன்ஜினை மட்டும் மாற்றி புதிய பிஎஸ்6 சான்றளிக்கப்பட்ட இன்ஜினை பொருத்தி பழைய லாரிகளை இயக்க அனுமதிக்க வேண்டும். முழுமையாக லாரிகளை ஸ்கிராப் செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பேசினார்.

Next Story