தஞ்சாவூரில் கைவினைப் பொருட்கள் செயல்முறை விளக்க பயிற்சி
Thanjavur King 24x7 |10 Dec 2025 7:32 PM ISTதேசிய கைவினைப்பொருட்கள் வாரம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8-ம்தேதி முதல் 14-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.
தஞ்சாவூர், டிச.10- தஞ்சை பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் கைவினைப்பொருட்கள் செயல்முறை விளக்கத்தை பயிற்சி கலெக்டர் கார்த்திக்ராஜா தொடங்கி வைத்தார். தேசிய கைவினைப்பொருட்கள் வாரம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8-ம்தேதி முதல் 14-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய திறன் தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் கைவினைப்பொருட்ள் விற்பனை மற்றும் கண்காட்சியை நடத்த உத்தரவிட்டது. அதன்படி தஞ்சையில் உள்ள தமிழக அரசின் கைவினைப்பொருட்கள் விற்பனையகமான பூம்புகார் நிறுவனத்தில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கைவினைவிப்பொருட்கள் செயல்முறை விளக்கமும் நடைபெற்றது. இதனை உதவி கலெக்டர் (பயிற்சி) கார்த்திக்ராஜா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த செயல்முறை விளக்கத்தில் தஞ்சை ஓவியம், தலையாட்டி பொம்மை, கண்ணாடி வேலைப்பாடுகள், வீணை, கலங்காரி ஓவியம், தஞ்சாவூர் தட்டு, பித் ஒர்க் வேலைப்பாடுகள் ஆகிய பொருட்களின் தயாரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையில் 10 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை உண்டு என்று கிளை மேலாளர் சக்திதேவி தெரிவித்தார்.
Next Story



