நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில், பஞ்சர் கடை தொழிலாளி படுகாயம்

நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில், பஞ்சர் கடை தொழிலாளி படுகாயம்
X
குமாரபாளையம் அருகே நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில், பஞ்சர் கடை தொழிலாளி படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே நின்ற லாரி மீது டூவீலர் மோதியதில், பஞ்சர் கடை தொழிலாளி படுகாயமடைந்தார். சேலம் வலசையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 28. பஞ்சர் கடை தொழிலாளி. டிச. 3ல் ,மாலை 02:30 மணியளவில் கோவைக்கு தன் சொந்த வேலையாக சென்று விட்டு, குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் கவுரி தியேட்டர் பின்புறம் தனது டி.வி.எஸ்.ஸ்போர்ட்ஸ் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது இவர் மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான, நிறுத்தி வைக்கபட்ட லாரியின் ஓட்டுனர், திருப்பூரை சேர்ந்த ஜோதிமணி, 47, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story