நீதிபதி சுவாமிநாதனை பதவி விட்டு நீக்ககோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
X
Komarapalayam King 24x7 |10 Dec 2025 7:38 PM ISTதிருப்பரங்குன்றம் விசயத்தில் இந்து மக்களுக்கு எதிராக செயல்பட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி விட்டு க்ககோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பரங்குன்றம் விசயத்தில் இந்து மக்களுக்கு எதிராக செயல்பட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி விட்டு க்ககோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் வைபவத்தில் தமிழக அரசு செயலுக்கு பாராட்டு தெரிவிக்கவும், இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் மத வழிபாட்டு தலங்களை தகர்க்க திட்டமிடும் நபர்களை கண்டித்தும், நீதிபதி சுவாமிநாதனை பதவி விட்டு நீக்ககோரியும் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் நடந்தது. வழக்கறிஞர் கார்த்திகேயன், தமிழ் தேசிய பேரியக்கம் ஆறுமுகம் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் பா.பா. மோகன் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நீதிபதி சுவாமிநாதனை பதவி விட்டு நீக்ககோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் காங்கிரஸ் ஜானகிராமன், மக்கள் நீதி மய்யம் காமராஜ், சித்ரா, சி.பி.ஐ. கணேஷ்குமார், சமூக ஆர்வலர் பிரகாஷ், இலக்கிய தளம் அன்பழகன், தி.க. சரவணன், சுவாமிநாதன், ம.தி.மு.க. நீலகண்டன், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
