என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்குச்சாவடி" பொதுக்கூட்டம்
Perambalur King 24x7 |10 Dec 2025 9:35 PM IST"என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்குச்சாவடி" பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாக எண் -211,212 ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க. ஆட்சியில் கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள் கொண்டு வரப்பட்டது குறித்தும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் எண்ணற்ற பல்வேறு திட்டங்கள்
பெரம்பலூர் ஒன்றியம்!கோணேரிப்பாளையம் கிராமத்தில்,ஒன்றிய கழகச்செயலாளர் எம்.இராஜ்குமார் தலைமையில் "என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்குச்சாவடி" பொதுக்கூட்டம் நடைபெற்றது! பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை - கே.கே.எம்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் ஒன்றியம், கோணேரிப்பாளையம் கிராமத்தில்,ஒன்றிய கழகச்செயலாளர் எம்.இராஜ்குமார் தலைமையில் "என் வாக்குச்சாவடி" வெற்றி வாக்குச்சாவடி" பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாக எண் -211,212 ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க. ஆட்சியில் கருவறை முதல் கல்லறை வரை திட்டங்கள் கொண்டு வரப்பட்டது குறித்தும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்கள் பயன்பெறும் நடைபெற்றுள்ளது என்றும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறினார். தி.மு.க.அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் வீடு,வீடாக வழங்கப்பட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று பொதுமக்கள் கூறினார்கள். இதில் பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை - தொ.மு.ச.பேரவை கவுண்சில் மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், ஒன்றிய கழக பொருளாளர் கலையரசன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் எஸ்.ஆர்.டி.ராமலிங்கம், வழக்கறிஞர் அழகேசன், கண்ணகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story


