பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு!!!

X
Ottapidaram King 24x7 |11 Dec 2025 8:03 AM ISTஓட்டப்பிடாரம் அருகே பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தூத்துக்குடி துறைமுக தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வடக்கு ஆரைகுளம் கிராமம் காலனி தெருவில் வசிப்பவர் முனியசாமி. இவரது மகன் லிங்கராஜ் (27). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஓட்டப்பிடாரத்திலிருந்து ஓசனத்து செல்லும் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு சென்று இவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிங் நியூஸ் செய்தியாளர் S.முகேஷ் குமார் ஓட்டப்பிடாரம்.
Next Story
