ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்....

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்....
X
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட மாற்றுக் கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ஹரிஷ் இந்தியா சட்டமன்ற உறுப்பினருமான திரு வசந்தம்.கார்த்திகேயன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்...
ரிஷிவந்திய சட்டமன்ற உறுப்பினரும்,கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் திரு வசந்தம் க.கார்த்திகேயன் அவர்களின் முன்னிலையில், ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.துரைமுருகன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாவட்ட அமைப்பாளர் திரு.A.R. சீனு, வடமாந்தூர் கிளைக் கழக செயலாளர் திரு.அய்யனார், கிளைக் கழக நிர்வாகி திரு.வெங்கடேசன் ஆகியோர்களின் ஏற்பாட்டில்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ரிஷிவந்தியம் வடக்கு ஒன்றியம், வடமாந்தூர் ஊராட்சியை சேர்ந்த திரு.வெங்கடேசன் (பாமக) அவர்கள், திரு.மணிகண்டன் (அதிமுக) ஆகியோர்கள் தங்களது ஆதரவாளர்கள் 100 - க்கும் மேற்பட்டோருடன் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Next Story