சாலையோர பழக்கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் மனு.

ஆரணி நகர சாலையோர பழக்கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்க கோரி ஆரணி பழக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆரணி நகர சாலையோர பழக்கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்க கோரி ஆரணி பழக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆரணி காந்தி மார்க்கெட் ரோட்டில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரத்தில் பழங்கள் விற்பனை செய்து வருகிறோம். மேலும் அவ்வப்போது நகராட்சி மற்றும் காவல் துறையினர் சாலையோர கடைகளை அகற்றி வருகின்றனர். காய்கறி அங்காடிக்கு தனியாக இடம் ஒதுக்கியது போல புதிய பஸ்நிலையம் அருகில் கட்டித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று சாலையோர பழக்கடைகளுக்கு இடம் ஒதுக்கி கடைகளை கட்டித் தருமாறு ஆரணி பழ வியாபாரிகள் சங்க தலைவர் என்.சங்கர் தலைமையில் பழ வியாபாரிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் என்.டி.வேலவன், புதிய பஸ்நிலையம் தற்போது இடித்துவிட்டு சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதில் உங்களுக்கு கடை கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.உடன் பழ வியாபாரிகள் சங்க செயலாளர் எம்.வெங்கடேசன், பொருளாளர் ஏ.குட்டி, துணைத்தலைவர் இளையராஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Next Story