கம்மவான்பேட்டை சக்திமலை குழந்தை பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு தங்க கவசம்

X
Arani King 24x7 |11 Dec 2025 8:29 AM ISTஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கம்மவான்பேட்டை சக்திமலை குழந்தை பாலமுருகன் கோயிலில் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கம்மவான்பேட்டை சக்திமலை குழந்தை பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கும் விழா கோலகலமாக நடைபெற்றது. ஆரணி பாலாஜி மற்றும் முருக பக்தர்கள் சேர்ந்து ஆரணி அடுத்த கம்மவான்பேட்டை சக்திமலை பாலமுருகன் கோயிலில் உள்ள மூலவருக்கு தங்க கவசத்தை வழங்கினர். இக்கவசத்தை மூலவருக்கு அணிவிக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றதில் உள்வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, மூலவருக்கு புதியதாக செய்யப்பட்டுள்ள தங்க கவசம் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா என முழக்கமிட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் கவிதா முருகன் தலைமையில், பெரியதனங்கள், முருக பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தங்க கவச அலங்காரத்தில் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
Next Story
