கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக தேர்தல் பிரசாரம் துவக்கம்

X
Krishnarayapuram King 24x7 |11 Dec 2025 10:44 AM ISTஎம்.எல்.ஏ சிவகாம சுந்தரி மேற்கொண்டார்
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணராயபுரம் பேரூர் கழகம் பகுதியில் திமுக சார்பில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" தேர்தல் பிரச்சார கூட்டத்தை எம்எல்ஏ சிவகாமசுந்தரி, தொகுதி பொறுப்பாளர் அம்பாள் நந்தகுமார் ஆகியோர் மஞ்ச மேடு பகுதியில் பூத் எண் 131ல் தொடங்கிவைத்து வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் திமுக அரசு சாதனைகள் குறித்த துண்டு பிரசங்கம் வழங்கி மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட வாக்குகள் சேகரித்தார். முன்னதாக கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக அனைத்து நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பேசினார் இன்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் சசிகுமார், அவைத்தலைவர் தில்லை நாயகம், நிர்வாகிகள் கே.எஸ்.பரமசிவம். ராஜகோபால், கிருஷ்ணன், காமராஜ், சிந்துஜா, பேரூராட்சி கவுன்சிலர்கள் ராதிகா, இளங்கோ, வடிவேல், லோகநாதன், நல்லேந்திரன், பொன்மனராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
