பாலப்பட்டியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வரும் அவலம்.

X
Krishnarayapuram King 24x7 |11 Dec 2025 11:50 AM ISTநடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் குழாய் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட வருகிறது. பிள்ளையின் லாலாபேட்டை முதல் வேங்காம்பட்டி செல்லும் சாலையில் பாலப்பட்டியில் சாலையின் வடிவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மேலும் குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
