மேட்டு மகாதானபுரத்தில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு

X
Krishnarayapuram King 24x7 |11 Dec 2025 12:41 PM ISTபல லட்சக்கணக்கான குடிநீர் பாசன வாய்க்காலில் கலந்து வீணாகும் அவலம்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து மகாதானபுரம் ஊராட்சி மேட்டு மகாதானபுரம் வழியாக திருச்சி மாவட்டம் வையம்பட்டிக்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் மேட்டு மகாதானபுரம் கட்டளை மேட்டு வாய்க்கால் வழியாக செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக குடிநீர் வெளியேறி பாசன வாய்க்காலில் கலந்து வீணாகி வருகிறது. இதனால் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இப்பகுதி வழியாக கூட்டு குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
