மாயனூரில் ஒன்றிய அரசின் விதி சட்டம் மற்றும் மின் திருத்த சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது

X
Krishnarayapuram King 24x7 |11 Dec 2025 6:10 PM ISTபோராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது
கரூர் மாவட்டம்,மாயனூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கம் சார்பில் ஒன்றிய அரசு கொண்டுவந்த விதைச்சட்டம் 2025 மற்றும் மின் திருத்த சட்டம் 2025 ஆகிய இரு சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்றிய அரசினை கண்டித்து கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டு சட்டங்களின் நகல்களை எரிக்க முயன்ற போது போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து வேன் மூலம் அழைத்து சென்று தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்
Next Story
