ஒரு வாரம் தள்ளி போகும் காளியம்மன் குண்டம் திருவிழா

X
Komarapalayam King 24x7 |11 Dec 2025 7:19 PM ISTகுமாரபாளையம் காளியம்மன் திருக்கோவில் மாசித்திருவிழாவை ஒரு வாரம் தள்ளி வைத்து நடத்தி கொள்ளலாம் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
குமாரபாளையம் காளியம்மன் திருக்கோவில் மாசித்திருவிழாவை ஒரு வாரம் தள்ளி வைத்து நடத்தி கொள்ளலாம் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மார்ச். 3, 2026, செவ்வாய்க்கிழமை மாலை 03:20 மணி முதல் 06:00 மணி வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் ஆகம சாஸ்திர விதிமுறைகள் படி, 6 மணி நேரம் முன்பு,கோவில் நடை சாத்தப்பட வேண்டும். இந்த நிலையில் காளியம்மனுக்கு சந்திர கிரகணம் முடிந்து, கோவில் பூசாரிகள் புதிதாக கங்கணம் கட்டி, புனிதநீர் அபிஷேகம் செய்து, காவேரி ஆற்றிலிருந்து அம்மன் சக்தி அழைத்து வந்து, இரவு 09:00 மணிக்குள் மகா குண்டம் பற்ற வைக்க சூழ்நிலை முடியாததால், குமாரபாளையம் காளியம்மன் திருக்கோவில் மாசித்திருவிழாவை தள்ளி வைத்து நடத்தி கொள்ளலாம் என உத்தேசிக்கப்பட்டது. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் கோவில் திருமண மண்டபத்தில் திருவிழாக்குழு தலைவர் வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெரியோர்கள், இந்த முடிவின் படி திருவிழாவை தள்ளி போட சம்மதம் தெரிவித்தனர். அதன்படி 2026, பிப் 24, பூச்சாட்டுதல், மார்ச் 3, மறு பூச்சாட்டுதல், மார்ச், 4, கொடியேற்றம், மார்ச். 10, புனித நீர் அபிஷேகம், தேர் கலசம் வைத்தல், மற்றும் சக்தி அழைத்தல், மார்ச். 11ல் மகா குண்டம், பூ மிதித்தல், மார்ச். 12ல் மகா தேர்த்திருவிழா, மார்ச். 13ல் தேர் நிலை அடைதல், மார்ச். 14ல் மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 15ல் ஊஞ்சல் விழா நடைபெறும் என விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்களால் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.
Next Story
