திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகம் மோசடி

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகம்   மோசடி
X
மூலம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி வெல்டிங் பட்டறை உரிமையாளரிடம்43,86,000
திண்டுக்கல், பழைய வக்கம்பட்டியை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உதயகுமார்(40) இவரின் Whatsapp- க்கு ஆன்லைன் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று மர்ம நபர் தொடர்பு கொண்டு ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் வர்த்தகத்திற்கு பயிற்சி அளித்து தொடர்ந்து மர்ம நபர் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்து பல்வேறு தவணைகளாக ரூ.43,86,300 செலுத்தினார் இவர் ஒவ்வொரு தவணையாக பணம் செலுத்தும் போது செயலில் லாபம் இருப்பது போல் காண்பித்தது கடைசியாக இவருக்கு அசல் மற்றும் இலாபத்துடன் செயலியில் ஒரு ஒரு கோடியே 92 லட்சத்தி 90 ஆயிரத்து 310 இருப்பது போல் செயலியில் காண்பித்தது. இந்நிலையில் உதயகுமார் தன் தேவைக்கு பணத்தை எடுக்க முயன்ற போது மர்ம நபர் தொடர்பு கொண்டு ரூ.1,50,000 பணத்தை முதலீடு செய்ய வற்புறுத்தினார். சிறிது நேரத்தில் செயலி முடங்கியது. மர்ம நபரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உதயகுமார் இதுகுறித்து S.P.பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார் அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் ADSP. தெய்வம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்
Next Story