திண்டுக்கல்லில் பிரபல துணிக்கடையில் துணி மாற்றும் அறையில் கேமரா இருப்பதாக மோசடி செய்து பணம் பறிக்க முயற்சி செய்த பெண் மீது வழக்கு

X
Dindigul King 24x7 |12 Dec 2025 7:57 AM ISTDindigul
திண்டுக்கல், வடக்கு ரத வீதியில் உள்ள பிரபல துணிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா இருந்ததாக திண்டுக்கல் மாலப்பட்டியை சேர்ந்த தனபால் மனைவி மகாலட்சுமி(45) என்பவர் பொய்யாக கூறி பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலருடன் சேர்ந்து ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதாக துணிக்கடையின் நிர்வாகத்தினர் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு பணம் பறிக்கும் நோக்கத்துடன் உடைமாற்றும் அறையில் கேமரா இருப்பதாக கூறிய மகாலட்சுமி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
