அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆலோசனைக் கூட்டம்

X
Dharampuri King 24x7 |12 Dec 2025 12:08 PM ISTடி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு
தர்மபுரி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தர்மபுரி சட்டமன்றத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைமை நிலைய செயலாளர், மாவட்ட கழக செயலாளர் டி கே ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தர்மபுரி தொகுதியை கேட்டுப் பெறுவோம் என்றும் ஆகவே பொறுப்பாளர்கள் யார் வேட்பாளராக நின்றாலும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று செயல் வீரர்கள் வீராங்கனைகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வேறு எங்கும் போகமாட்டார். வதந்தி என்றும் இன்று கூட என்னிடம் வருத்தப்பட்டார். ஜனவரி 5-ல் அமமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். நீதிபதி குறித்து மனு கொடுத்துள்ள இந்தியா கூட்டணிக்கு பெரும்பாண்மை இல்லை. நீதியரசர்கள் மேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் இப்படி கொடுப்பார்கள். திமுக கொடுத்துள்ள மனு வித்தியாசமாக உள்ளது. அவர் கொடுத்த தீர்ப்பை திமுக ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும், அவர் விருப்பம். வருகிற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. எங்களை தொடர்பு கொள்கிறார்களோ, அணுகுமுறையை பொறுத்து முடிவெடுப்போம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, பாமக ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்திருப்பது, என்னை பாலு தொடர்பு கொண்டார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் மாநில அரசு செய்ய வேண்டியதில்லை. திருப்பரங்குன்றம் போன்று, கடவுள், மதம், ஜாதி பெயரால், கட்சிகள், அமைப்புகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது ஏனென்றால் அதுததான் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதை சீர்குலைக்கும் இதை அரசும் நீதிமன்றமும் சரியாக செய்யும் என்று நம்புகிறோம். என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
Next Story
