ராசிபுரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் ரசிகர்கள் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் அன்னதானம்..

ராசிபுரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் ரசிகர்கள் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் அன்னதானம்..
X
ராசிபுரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் ரசிகர்கள் அணைக்கும் கரங்கள் இல்லத்தில் அன்னதானம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் ரசிகர்கள் நிர்வாகிகள் அவரது 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அணைக்கும் கரங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியவர்கள், மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என 100.க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவாக இனிப்புகள் , இட்லி, புரோட்டா, கேசரி உள்ளிட்டவை வழங்கி சிறப்பித்தனர். தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் பல்லாண்டு வாழ பிரார்த்தனை செய்து இறைவனை வணங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த யோகா ஸ்டிக்கர்ஸ் ராஜா(எ) யோகராஜன், தலைமையில் ரசிகர்கள், நிர்வாகிகள் எம்‌. மனோகரன், கே. செல்லதுரை, ரா. நித்தியானந்தம், ஆர். தங்கராஜ், பூக்கடை வி.ரஜினி மாதேஷ், கே.சுரேஷ் ரஜினி, எஸ்.சக்திவேல், சி. ரமேஷ், புதுப்பாளையம் அசோக் குமார், ஏ.ஆர். சி. வினோத் (எ) பாலகிருஷ்ணன், ஆர்.கே.சசிகுமார், எஸ். சுரேஷ், கே.கார்த்திகேயன், ஏ. கமால் (எ)மாணிக் பாஷா, விக்கி, எஸ். தமிழ்ச்செல்வன் போட்டோகிராபர் வடிவேல், உள்ளிட்ட ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story