டூவீலர் மீது, பொக்லின் மோதிய விபத்தில் பஞ்சர் கடை தொழிலாளி படுகாயம்

டூவீலர் மீது, பொக்லின் மோதிய விபத்தில் பஞ்சர் கடை தொழிலாளி படுகாயம்
X
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது, பொக்லின் மோதிய விபத்தில் பஞ்சர் கடை தொழிலாளி படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் வட்டமலை பகுதியில் வசிப்பவர், பிரபு, 40. பஞ்சர் கடை தொழிலாளி. இவர் டிச. 8ல் கத்தேரி பிரிவு பகுதியில் மாலை 02:30 மணியளவில் வந்த போது, சாலை பராமரிப்பு பணியில் ஈடுபட்ட பொக்லின் ஓட்டுனர், பிரபு வந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் டூவீலர் மீது மோத, பிரபு பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொக்லின் ஓட்டுனர் எடப்பாடி பகுதியயை சேர்ந்த மூர்த்தி, 33, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story