ஏரியில் குப்பை கழிவு சுகாதார சீர்கேடு

பாப்பாரப்பட்டி ஏரி அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது
ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் செல்லும் பிரதான சாலை அருகே எஸ் பாப்பாரப்பட்டி ஏரி உள்ளது.இந்த ஏரியில் ஆண்டு முழுவதும் நீர் நிறைந்து காணப்படுகிறது.மேலும் மீன் பிடி தொழில் நடைபெறுவதால் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது.இந்நிலையில் எஸ். பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் பேட்டரி வாகனம் மூலம் சுமந்து கொண்டு தினமும் ஏரிக்கரையோரம் கொட்டி வருகின்றனர் .இதனால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பையை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story