சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: தஞ்சாவூரில் பாமக ஆர்ப்பாட்டம்
Thanjavur King 24x7 |12 Dec 2025 10:01 PM ISTதஞ்சாவூரில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர், டிச.12: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரியும் வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு வழங்கிய சட்டமாக்கப்பட்டதை நடைமுறைப்படுத்தக் கோரியும் பாமக நிறுவனர் தலைவர் மருத்துவர் ச ராமதாஸ் அறிவிப்பின்படி தமிழகமெங்கும் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று தஞ்சை மாவட்டம் சார்பாக தஞ்சாவூர் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்ட செயலாளர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம க ஸ்டாலின் தலைமையிலும் மாவட்ட செயலாளர்கள் கோபி சந்தர், தியாகராஜன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி விமல் எம் ராம்குமார் மாவட்ட தலைவர்கள் தீ தமிழ்ச்செல்வம் எம் ரமேஷ் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர் அனைவரையும் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர சக்திவேல் வரவேற்றார் ஆர்பாட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் பானுமதி சத்யமூர்த்தி மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.பி குமார் கோ ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story


