மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்ப்பு பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்க்கும் பணி பார்வையாளர் ண கூடுதல் மாநில தேர்தல் ஆணையர் (பஞ்சாப்) எஸ்.எஸ்.ஃபால் (S.S.BAL) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்ப்பு பணியினை பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் நாமக்கல் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்க்கும் பணி பார்வையாளர் / கூடுதல் மாநில தேர்தல் ஆணையர் (பஞ்சாப்) எஸ்.எஸ்.ஃபால் (S.S.BAL) அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்க்கும் பணியினை பார்வையிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026-யை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி (First Level Checking of EVMs-VVPATs) நேற்று (11.12.2025) தொடங்கி வைக்கப்பட்டு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணியானது, மேற்பார்வையாளர் (First Level Checking Supervisor)/மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அவர்கள் மேற்பார்வையில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள், கிராம உதவியாளர்கள் என 100 நபர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நாமக்கல் மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரி பார்க்கும் பணி பார்வையாளர் / கூடுதல் மாநில தேர்தல் ஆணையர் (பஞ்சாப்) எஸ்.எஸ்.ஃபால் (S.S.BAL) முதற்கட்ட சரி பார்க்கும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்வதோடு, வாக்காளர்கள் எவ்வித தடைகளுமின்றி தங்களது ஜனநாயக கடமையினை ஆற்றிடும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை கவனமாக மேற்கொள்ளுமாறு பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தனி வட்டாட்சியர் (தேர்தல்) செல்வராஜ் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story