உதயநிதி பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சாரம் கூட்டம்.

உதயநிதி பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சாரம் கூட்டம்.
X
சோழசிராமணியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர், டிச.13: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கபிலர்மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம் தலைமை வகித்தார். கபிலர்மலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சாமிநாதன், கபிலர்மலை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் சரவணகுமார், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவலடி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருங்குறிச்சி ஊராட்சி தலைவரும், மாவட்ட பிரதிநிதியுமான சபரி மாணிக்கம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திமுக தலைமைக் கழக பேச்சாளர் ஆரணி மாலா கலந்து கொண்டு தமிழக அரசால் பொதுமக்களுக்கும். மாணவ, மாணவிகளுக்கும், பல்வேறு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை குறித்து எடுத்துக் கூறினார். அப்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அதற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வடிவேல், கபிலர்மலை ஒன்றிய தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் வடிவேல் பரமத்தி வேலூர் தொகுதி தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மூர்த்தி, கபிலர்மலை ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் வளர்மதி சுப்பிரமணியம்,குப்பிரிக்காபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் அரசு என்கிற பழனிச்சாமி ஜமீன் இளம்பிள்ளை முன்னாள் ஊராட்சி தலைவர் அபிராமி தங்கவேல்,மாவட்ட .ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
Next Story