"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சி அமைச்சர் மற்றும் எம்.பி பங்கேற்ப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் முதற்கட்டத்தில் 2,49,540 மகளிரும்,2-ம் கட்ட விரிவாகத்தின் மூலம் 37,308 மகளிரும் என 2,86,848 மகளிர் பயன்-ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கத்தின் கீழ் மகளிருக்கு பற்று அட்டைகளை வழங்கி தகவல்!

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தமிழ்நாட்டின் சாதனை பெண்களின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற காணொளி நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கீழ் திட்டத்தின் 37,308 மகளிருக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மகளிர் வாழ்வில் ஏற்றம் காண கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயண திட்டம், பெண்கல்வியை உயர்த்திடும் வகையில் புதுமைப் பணெ் திட்டம், பணிபுரியும் மகளிருக்கு தோழி விடுதிகள், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் வரலாற்றுச் சிறப்புமிக்க “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை” முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான 2023-ஆம் ஆண்டு, பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக தொடங்கி வைத்தார்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கும் “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” மூலம் 2,49,540 மகளிர் பயன் பெற்று வருகின்றனர்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விடுபட்ட மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கிடும் விதமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்துள்ளார்கள். அதன்படி, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் 37,308 மகளிருக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.நாமக்கல் வட்டத்தில் 5085 மகளிரும், இராசிபுரம் வட்டத்தில் 7896 மகளிரும், சேந்தமங்கலம் வட்டத்தில் 4195 மகளிரும், மோகனூர் வட்டத்தில் 1934 மகளிரும், கொல்லிமலை வட்டத்தில் 1165 மகளிரும், திருச்செங்கோடு வட்டத்தில் 7739 மகளிரும், பரமத்திவேலூர் வட்டத்தில் 3828 மகளிரும், குமாரபாளையம் வட்டத்தில் 5466 மகளிரும் என மொத்தம் 37308 மகளிர் பயன்பெறுகின்றனர். எனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதற்கட்டத்தில் 2,49,540 மகளிரும், 2-ம் கட்ட விரிவாகத்தின் மூலம் 37308 மகளிரும் என மொத்தம் 2,86,848 மகளிர் பயன்பெறவுள்ளனர்.இந்நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.கு.செல்வராசு, வருவாய் வட்டாட்சியர்கள் வே.சாந்தி (நாமக்கல்), பி.எஸ்.லெனின் (திருச்செங்கோடு), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.சு.சுந்தரராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story