சீர்காழி நகரின் பிரதான சாலைகளில் இரவு பகலாக சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் , விபத்துக்கள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்

சீர்காழி நகரின் பிரதான சாலைகளில் இரவு பகலாக சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள்  , விபத்துக்கள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்
X

சீர்காழி நகரின் பிரதான சாலைகளில் இரவு பகலாக சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு , விபத்துக்கள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட தென்பாதி,கச்சேரி சாலை, தொடங்கி கடைவீதி, கொள்ளிடம் முக்கூட்டு,பேருந்து நிலையம்,இரயில் நிலையம் வரை என நகரின் பிரதான சாலைகளில் இரவு பகலாக நூற்றுக்கணக்கான கால்நடைகள் சுற்றி திரிகின்றன.சாலையோரங்களில் அமர்ந்தும், சாலைகளில் திடிரென குறுக்கே செல்வதாலும் வாகனஓட்டிகள் பாதிப்படைகின்றனர். இதனால் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.இதுவரை மாடுகள் முட்டியதாலும், வாகன விபத்தாலும் பெண்கள், மாணவர்கள் வாகன ஓட்டிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியும், குப்பை மற்றும் கழிவுகளை தின்று மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.மேலும் சாலையோர பழக்கடை, பூக்கடை, உணவகம் மளிகை கடைகளில் புகுந்து மாடுகள் பொருட்களை சர்வசாதாரணமாக தின்று செல்வதால் வணிகர்களும் பாதிக்கபட்டுள்ளனர். ஆனால் கால்நடை உரிமையாளர்களோ இதனை கண்டு கொள்ளாமல் அதிகாலை மற்றும் மாலை பால் கறக்கும் நேரத்திற்கு மட்டுமே கால்நடைகளை வீட்டிற்கு ஓட்டி சென்று கறவை முடிந்ததும் மீண்டும் சாலைக்கே விரட்டி விடுகின்றனர். எனவே ஆபத்தான முறையில் சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story