நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு!

நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் புதிய நிர்வாகிகள் தேர்வு!
X
தலைவராக கே.கே. பாலசுப்பிரமணியம், செயலாளராக ராஜரத்தினம், பொருளாளராக ஐயப்பன் , இணைச் செயலாளராக ப.நந்தகுமார், அமுதா தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்களாக அருண்பிரசாத், கனிமொழி ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர்
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கான தேர்தல், கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. வேட்புமனு தாக்கல், வாபஸ் வாங்குதல் உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்து, இறுதி பட்டியல் அறிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், தலைவர், செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 400 சங்க உறுப்பினர்களில், 390 வழக்கறிஞர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர், தலைவராக கே.கே. பாலசுப்பிரமணியம், செயலாளராக ராஜரத்தினம், பொருளாளராக ஐயப்பன் , இணைச் செயலாளராக ப.நந்தகுமார், அமுதா தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்களாக அருண்பிரசாத், கனிமொழி ஆகியோர் போட்டியின்றி வெற்றி பெற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், சக வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story