டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாள் விழா : நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை ஆயிரம் பேருக்கு அன்னதானம்..

டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாள் விழா : நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை ஆயிரம் பேருக்கு அன்னதானம்..
X
டிடிவி தினகரன் அவர்களின் பிறந்த நாள் விழா : நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை ஆயிரம் பேருக்கு அன்னதானம்..
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அவர்களின் 62 ஆவது பிறந்தநாள் விழாவினை கழக நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஏ‌.பி. பழனிவேல் அவர்கள் தலைமையில் ராசிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவிலில் டிடிவி தினகரன் அவர்களின் பெயருக்கு சிறப்பு பூஜை செய்து கழக வளர்ச்சி அடையவும், அவர் முதல்வராக வேண்டியும் நிர்வாகிகள் பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், இனிப்புகள், தக்காளி சாதம் உள்ளிட்டவை வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் அன்புச் செழியன், பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், நகரக் கழக செயலாளர்கள் தர்மராஜ், பூபதி, ஒன்றிய கழக செயலாளர்கள் ராஜா, முருகேசன், ரவிச்சந்திரன், சதீஷ்குமார், பேரூர் செயலாளர்கள் பெரியசாமி, ரஞ்சித் குமார், மாவட்ட அம்மா பேரவை மேகநாதன் துரைசாமி, மாவட்ட மகளிர் அணி அம்பிகா, திலகம் உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story