தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்

Tenkasi King 24x7 |13 Dec 2025 11:09 PM ISTதென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்
டிசம்பர் 13, தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நீராட வருவதற்காக வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. 2. தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டை விளையூரில் அமைந்துள்ள பேருந்து நிலையம் சேதம் அடைந்தது காணப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அப்பகுதியில் எழுந்துள்ளது. 3. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள அபயகஸ்த ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 4. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதிகள் அமைந்துள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று நலம் காக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 5. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மின் பகிர்மான வட்ட கோட்டா அலுவலகத்தில் இன்று குறைவிற்கும் முகாம் நடைபெற்றது. 6. தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கடம்பட்டி பஞ்சாயத்து பகுதியில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 7. தென்காசி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அவர்களை பாராட்டும் வகையில் பாராட்டு விழா நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 8. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி என் வெற்றி வாக்கு சாவடி என்னும் தலைப்பின் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. 9. தென்காசி மாவட்டம் புளியங்குடி வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் இன்று தனியார் துறையின் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான வேலை பணி நாடுனர்கள் கலந்து கொண்டனர். 10. தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளில் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டிசம்பர் 15 19 வரை வட்டார அளவில் பிரச்சார இயக்கம் நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். 11. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் இன்று 17 டிகிரி செல்சியஸுக்கும் கீழாக வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 12. திருநெல்வேலி சரகத்தில் 25 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ளவர்களில் சங்கரன்கோவில் டவுன் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய பாலமுருகன், தென்காசி போக்குவரத்து ஆய்வாளராக பணியாற்றிய மணி மற்றும் குற்றால காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய முத்து கணேஷ் ஆகிய மூன்று நபர்களும் திருநெல்வேலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 13. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 14. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட திருவேங்கடம் கால்வாய் பகுதியை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதியில் எழுந்துள்ளது. 15. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை டிசம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. 16. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கரன்கோவில் பகுதியில் தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் மாஸ்டர் அசோசியேசன் இணைந்து கலைஞர் கைவினை திட்ட சான்றிதழை இன்று கலைஞர்களுக்கு வழங்கியது. 17. தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செல்லும் முக்கிய வழிச்சாலை பகுதிகளில் விடுமுறை தினம் என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குற்றாலம் வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் தென்காசி முக்கிய நகர் பகுதிகளிலும் கேரளாவிற்கு செல்லும் கனிம வள மற்றும் கேரள அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் குற்றாலம் வந்து செல்லும் நிலையில் முக்கிய வழிபாதை நெடுகிலும் வாகனங்கள் கடும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றது.
Next Story
