ராமநாதபுரம் கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது
Ramanathapuram King 24x7 |14 Dec 2025 3:20 PM ISTதொண்டி அருகே 150 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது கடலோர காவல் படையினர் விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே கடலோர கிராமமான முள்ளிமுனை கிராமத்தில் கஞ்சா இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கடலோர காவல் படை தொண்டி நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் இளையராஜா காவல் ஆய்வாளர் ஜான்சிராணி தலைமையில் சார்பு ஆய்வாளர்,அய்யனார்,தலைமை காவலர்கள் சரவண பாண்டி, ரமேஸ்,கோபு, பிரான்சியஸ், பாலா, ராம்குமார், மற்றும் காவலர்கள் முள்ளிமுனை மீனவ கிராமத்தில் ரோந்து சென்ற பொழுது காளி கோயில் அருகில் உள்ள முகத்துவாரம் பகுதியில் போலிசாரை கண்டதும் தப்பி ஓடினர் அந்த இடத்தை சோதனை செய்த பொழுது இலங்கைக்கு கடத்துவதற்காக பச்சை பிளாஸ்டிக் பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 170 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இருந்தது அதனைக் கைப்பற்றி அதே ஊரைச் சேர்ந்த தூண்டி கருப்பு 38/25 த/பெ ராஜா என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர் கடலோரப் பகுதிகளில் கஞ்சா அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
Next Story


