தென்காசி வக்கீல்கள் போராட்டம்

தென்காசி வக்கீல்கள் போராட்டம்
X
தென்காசி வக்கீல்கள் போராட்டம்
தென்காசியில் இன்று வழக்கறிஞர்கள் மனிதச்சங்கிலி போராட்டம் மாநில தலைவர் நா.மாரப்பன் பங்கேற்பு தென்காசி, டிச - 15 தமிழ்நாடு நீதிமன்றங்களில் டிசம்பர் 1 முதல் இ - பைலிங் முறையை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று (15.12.2025) காலை 10.30 மணிக்கு தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்கும் மனித சங்கிலி போராட்டமும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் நா.மாரப்பன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் கடந்த 13.12.2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் படி 15.12.2025 முதல் 19.12.2025 வரை நீதிமன்ற பணியிலிருந்து விலகியிருக்கவும், மேலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகாமல் விலகியிருக்கவும் நமது வழக்கறிஞர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்ளும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் இன்று (15.12.2025) தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் அருகில் காலை 10.30 மணிக்கு மனித சங்கிலி போராட்டமும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அருகில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தலைவர் நா.மாரப்பன் தலைமை ஏற்று சிறப்புரையாற்ற உள்ளார். எனவே தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது ஒற்றுமையினை நிலைநாட்டவும், நமது கோரிக்கைகளை நிறைவேற்றவும் அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட அட்வகேட் அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் ஆர்.மாடக்கண் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story