ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எதிர்காலம் இல்லாமல் இருண்டு போகும்.

நமது நாட்டில் மே மாதம் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுக்கு வருமென நாமக்கல்லில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி அளித்தார்.
பாஜகவின் நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலொசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்திற்கு பின் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் பேசுகையில் :- கம்யூனிஸ்ட்களின் இறுதி மாநிலமாக கேரளா இருந்து கொண்டுள்ளது, உலகத்திலேயே கம்யூனிசம் என்கின்ற பெயர் இருந்து கொண்டு இருக்கின்ற நமது நாட்டில் மே மாதம் கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவுக்கு வரும் என்பது தெளிவாக தெரிகிறதுகேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு அதிக அளவில் மக்கள் வாக்களித்துள்ளார்கள் ஆகவே 2026 ம் ஆண்டு கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜகவுக்கும் இடையே தான் போட்டி நிலவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர், கடந்த 55 மாதங்களில் 6700 படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது, இந்த படுகொலைகளுக்கு காரணமே போதைப்பொருள் பழக்கம் தான், இந்தியாவில் 2021 ம் ஆண்டுக்கு பிறகு போதைப்பொருட்கள் பழக்கம் அதிகம் பயன்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு அமைந்துள்ளதுதமிழகத்தில் அடுத்த தலைமுறையை முடக்க போகும் நிலை உருவாகியுள்ளன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு எதிர்காலம் இல்லாமல் இருண்டு போகும், அடுத்த தலைமுறையை அழித்து கொண்டு இருக்கும் திமுகவை தூக்கி எரிய வேண்டுமென மக்கள் முடிவு செய்து விட்டார்கள். NDA கூட்டணிக்கு மக்கள் வந்து விட்டார்கள், மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வருவது குறித்து கவலைப்பட வில்லை என அவர் பேசினார்
Next Story