பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

X
Perambalur King 24x7 |15 Dec 2025 6:15 AM ISTஇன்டஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதில், மகாலட்சுமியும், கண்ணனும் காதலித்து வந்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சத்திரமனை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (55), இவரது மகள் மகாலட்சுமி (22), எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரை நேற்றிரவு முதல் காணவில்லை என அவரது தந்தை பெரம்பலூர் மாவட்டம் ஊரக காவல் நிலையத்தில் வீட்டிலிருந்த பெண் காணாவில்லை எனவும், கண்டுபிடித்து தரக்கோரியும், புகார் மனு கொடுத்திருந்தார்.போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள தம்பிரான்பட்டியை சேர்ந்த கண்ணன் மகன் வெள்ளைச்சாமி என்பவருடன் இன்டஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதில், மகாலட்சுமியும், கண்ணனும் காதலித்து வந்துள்ளனர். நேற்றிரவு வீட்டைவிட்டு வெளியே கிளம்பிய காதல் ஜோடி இன்று காலை திருமணம் செய்துருமணம் செய்து கொண்டு பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள், உறவினர்களிடம் இருந்து தனக்கும், தனது காதல் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க கோரி தஞ்சமடைந்தார். போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மாயமான பெண் காதல் கணவருடன் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
Next Story
