அச்சன்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

அச்சன்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
செங்கோட்டை அருகே தமிழ்நாடு-கேரளா மாநில எல்லையில் ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றாக அச்சன்கோவில் அரசன் அய்யப்பன் கோயில் உள்ளது. சாஸ்தாவாக திகழும் இங்கு வரும் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் மண்டல மகோற்சவ திருவிழா நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவில் செல்வதற்கு காலை 8 மணி, மாலை 3.15 மணி, 5.15 மணி என்று 3 முறை மட்டுமே கேரளா அரசு பேருந்துகள் உள்ளன. இதேபோல் தமிழ்நாடு அரசு பேருந்து காலை 6.15 மணி, மதியம் 2.15 மணி என்று இரண்டு முறை பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. எனவே பத்து நாட்கள் நடைபெறும் மண்டல மகோற்சவ திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசு சார்பில் பேருந்துகள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story