ராமநாதபுரம் மாவட்ட அளவில் கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
Ramanathapuram King 24x7 |15 Dec 2025 12:35 PM ISTதொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் மாவட்ட அளவில் கல்லூரி பேராசிரியர்களுக்கு வழிகாட்டி ஆசிரியர் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முத்துப்பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் கல்லூரி பேராசிரியர்களுக்கு வழிகாட்டி ஆசிரியர் என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முத்துப்பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.சூசைநாதன் வரவேற்புரையாற்றினார்.கல்லூரியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.அருள்ராஜா சிறப்புரையாற்றினார். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கமிஷ்னர் லதா கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்து துவக்கவுரையாற்றினார். மாநிலத் திட்ட மேலாளர் சண்முகராஜ் நிமிர்ந்து நில் திட்டத்தைப் பற்றி எளிமையாக கல்லூரி பேராசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் திருநெல்வேலி மாவட்ட திட்ட மேலாளரும், முதன்மை பயிற்றுனருமான சிவபாரதி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான நிமிர்ந்து நில் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாணவர்களிடையே புத்தாக்க ரீதியில் தொழில் முனைவு சூழலை உருவாக்குதல், புதுமையான சிந்தனைகள், பிரச்சினையை அடையாளம் காணுதல் மற்றும் பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன்கள் ஆகியவற்றை ஊக்குவித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். பயிற்சியை ராமநாதபுரம் மாவட்ட திட்ட மேலாளர் பொன்வேல்முருகன் மற்றும் விருதுநகர் மாவட்ட திட்டம் மேலாளர் பிலிப் மில்டன் ஒருங்கிணைத்தார்கள்.
Next Story


