பூ வியாபாரி தவற விட்ட பணத்தை ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

X
Srivilliputhur King 24x7 |15 Dec 2025 3:57 PM ISTஸ்ரீவில்லிபுத்தூரில் பூ வியாபாரி தவற விட்ட பணத்தை ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு
பூ வியாபாரி தவற விட்ட பணத்தை ஒப்படைத்த மாணவர்களுக்கு பாராட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பூ வியாபாரி தவற விட்ட பணத்தை மீட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களை காவல் ஆய்வாளர் பாராட்டினார். ஸ்ரீவில்லிபுத்தூர் சிவஞானபுரம் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி(65). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து எறிய போது, கைப்பையை தவறவிட்டார். அவ்வழியே சாலையை கடந்து சென்ற பள்ளி மாணவர்கள் கைப்பையை எடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பையில் ரூ.6,200 பணமும், ஏ.டி.எம் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. ஆதார் கார்டு முகவரியை வைத்து மூதாட்டியை வரவழைத்த போலீஸார் பள்ளி மாணவர்கள் மூலமாகவே பணத்தை அவரிடம் ஒப்படைத்தனர். கீழே கிடந்த பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களை காவல் ஆய்வாளர் முத்துக்குமார் பாராட்டினார்.
Next Story
