நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு கருத்தரங்கம்.

X
NAMAKKAL KING 24X7 B |15 Dec 2025 6:23 PM ISTநாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், மனநல பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மன நல திட்ட டாக்டர் பிரஷாந்தினி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, போதைப் பொருள் பழக்கத்தின் தீவிர விளைவுகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள், மனநல பாதிப்புகள் மற்றும் சமூக, குடும்ப சிக்கல்கள் குறித்து விரிவாக பேசினார்.மேலும், மனநலத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ, தேவையற்ற முறையில் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், ஆரோக்கியமான சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும், போதுமான தூக்கம் அவசியம், போதைப் பொருள் பழக்கங்களை முற்றிலும் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.மாணவ, மாணவியர்களுக்கு போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விலங்கியல் துறைத் தலை A ராஜசேகர பாண்டியன், துறைத் தலைவர்கள, பேராசிரியர்கள், மாணவ உள்ளிட்டோர் கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி யூத் ரெட் கிராஸ் திட்ட செய்திருந்தார்.
Next Story
