திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்
Dindigul King 24x7 |15 Dec 2025 6:38 PM ISTCoffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது
. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் 27 மாணவ, மாணவியருடன் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது மாணவ, மாணவியரிடம் அவர்கள் பயின்று வரும் பாடப்பிரிவு, அதனைத் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு எடுத்துவரும் சிறப்பு முன்னெடுப்புகளான நான் முதல்வன், வெற்றி நிச்சயம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், திறன் வளர்ப்புப் பயிற்சிகள், தமிழ்நாடு அரசு வழங்கும் வேலைவாய்ப்புகள், இரயில்வே ஆள்சேர்ப்பு வாரியம், பணியாளர் தேர்வு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசின் அமைப்புகளின் மூலமான வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கிக் கூறினார்.
Next Story



