அல்லாள இளைய நாயக்கர் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாள் தைத் திங்கள் 1-ஆம் நாள் (ஜனவரி-15) அரசு விழாவாக கொண்டாடுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாள் தைத் திங்கள் 1-ஆம் நாள் (ஜனவரி-15) (வியாழன் கிழமை) அரசு விழாவாக மிகச்சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான செய்தித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகளில், மாவட்டங்களில் தலைவர்களின் பிறந்த நாட்களை அரசு விழாக்களாக கொண்டாடிட தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம் ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான தைத் திங்கள் 1-ஆம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 2-ம் ஆண்டாக வருகின்ற தை திங்கள் 1 ஆம் நாள் அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்படவுள்ள அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவினை 15.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. மாவட்ட காவல் துறையினர் விழா நாளன்று சமுதாய பெருமக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். விழாவின் போது தேவையான அனைத்து காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தினரை ஒழுங்குபடுத்துதல் மற்றும் போக்குவரத்து சரிசெய்யும் பணிகளை செய்திட வேண்டும். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து இராஜவாய்க்கால் அமைத்த அல்லாள இளைய நாயகர் அவர்களுக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வடகரை ஆத்தூர் ஊராட்சி ஜேடர்பாளையத்தில் அமைந்துள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு காலை 10.00 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா சிறப்புரையாற்றவுள்ளார்கள். மேற்கண்ட நிகழ்ச்சிகள் சிறப்புற நடைபெற்றிட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இவ்விழாவில் பல்வேறு சமுதாய அமைப்பினருக்கு அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திட உரிய நேரம் ஒதுக்கி சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். நீர்வளத்துறையினர் விழா நடைபெறும் இடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மின்பொறியாளர் பொதுப்பணித்துறை ஈரோடு கோட்டம் (மின்) அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ள வளாகத்தில் விழா நடைபெறும் ஒரு நாள் முன்பாக வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும். கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் விழா நடைபெறும் இடத்தை சுத்தம் செய்தல், பந்தல், ஒலி, ஒளி அமைப்பு, முக்கியப் பிரமுகர்கள், பொது மக்கள் அமர்வதற்கு சேர் போன்ற ஏற்பாடுகளை செய்திட வேண்டும். மேலும், விழா நாளன்று உணவருந்தும் இடம், இடங்களை சமன் செய்து சுத்தப்படுத்துதல் மற்றும் குடிநீர் வசதி செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். விழா மேடைக்கு முக்கிய பிரமுகர்கள் அமர இருக்கைகள், டீபாய் மற்றும் ரோஸ்டம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளையும் விழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். விழா தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), முதன்மைக் கல்வி அலுவலர், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் விழாவினை சிறப்பாக நடத்திட வேண்டும். மாவட்ட நல அலுவலர் விழா நடைபெறும் நாள் அன்று வருகை தரும் பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். அவரச சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) 108 தயார் நிலையில் வைத்திட வேண்டும்.தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் அவசர உதவிக்கு தீயணைப்பு துறையின் சார்பாக ஜேடர்பாளையத்தில் ஒரு தீயணைப்பு வண்டியை தயார் நிலையில் வைத்திட வேண்டும். அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாள் தைத் திங்கள் 1-ஆம் நாள் (ஜனவரி-15) அரசு விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விமலா, மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பி.எஸ்.லெனின், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தனராசு, சண்முகம், செல்வராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா (வேலூர்), வட்டாட்சியர்கள், காவல் துறையினர், துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story